Tuesday, May 17, 2011

என் கடந்த கால வாழ்க்கை.....!! - முதல் பகுதி!!

அந்திவானில்...
அன்றலர்ந்த குருஞ்சியினது குரல்கேட்டு கொண்டிருந்த வேளையிலே...

வெண்ணிலவே வெட்கி தலை குனியும் அந்த சோகத்திலோர்...
சுகந்தனை.. உன் இரு விழிகளில் விளக்கேற்றி...
விளங்கவைத்து உன் விடியல் முகம்....!!

உந்தன் மனையின் உச்சிதனில்...
ஒன்றாய் அமர்ந்து, காலம் தன் கணக்கு முடிப்பதுக்கூட தெரியாமல்..
மெய்யன் நான் பொய்யுரைதேன்...
உன் பொழிவு முகம் கண்டதினால்....!!!

தினமும் ஆபயனை அள்ளிசெல்ல குவளை கொண்டு வருவாய்...
தித்திக்கும் செந்தமிழில் செம்மையாய் உரையாடினோம் இருவரும்....!!!

என் கண்களில் விழுந்த உன்னை...
என்னில் தேடித்தேடி தேவையை மறந்தே போனேன்...!!

அன்று ஒருநாள், என்னை கணிப்பொறியில் உட்படுத்த...
என் மனை வந்து சேர சிறிது தாமதமான தருணம் பார்த்து..

எனை பற்றி என் சோதரியிடம்  விசாரித்து...
என் காதல் மனதில் அசுரத்தனத்தை களையேடுத்தாய்.... எப்படி மறவேன் உனை...!!!

மட்டையில் என் மந்தத்தனம்.. மெத்தனமாய் பதிந்திருந்து...
கல்வி கண்ணை மட்டும் இமையடையாமல், இருந்த தருணம்...

அப்போது.. நான் உன்னை கண்டு ஈராறு மாதங்கள்...
மதங்கொண்ட யானை போல மதி மயங்கி சென்றிருக்கும்...

உன் ஒற்றைவார்த்தை அதிர்ச்சிக்குள்ளக்கியது எனை...!!

உன்னோடு பேசும் முன்னரே உன் ஓர விழி பார்வையை என்னில் விதைத்திருகிறாய்...
அப்போது தான் உணர்ந்தேன்... உன்னில் எனை உணரும் வலியை...
வாழ்வின் முதல் வசந்தம்...!!

காலங்கள் உருண்டோடுவது உணராமல்...
உயிரோடு உயிராக ஒட்டி வாழ்ந்தோம்...
நட்பின் போர்வையை போர்த்தி கொண்டு...!!

உன் புதுமனை புகுவிழாவில்...
பூவுக்குள் முகம்காட்டி புன்னகைத்தாய்....!!

உன் தோழிகள் இருப்பதுகூட அறிந்தும் அறியாமல்...
என்னோடு உரையாடினாயே..!

அடுத்த தினம்...
அந்தி மாலை பொழுது... பட்சிகள் கட்சிக்கூட்டம் போட்டது போல்...
ஒரு அழகான மரத்தின் உச்சியில் ஒரு குருவிகுடும்பம்...
கண்டுகொண்டே, கீழிறங்கும் போது...
காயமுற்றேன்... உன் புருவ வெட்டுகளால்....!!

காதலின் உச்சம்...
என் மனைக்கு வந்தாய்...
உன் இளைய சோதரனோடு.... என் வீட்டில் யாருமேயிலாத தருணம் பார்த்து...

இயந்திர விளையாட்டில் உன் தமையனிருக்க....

என் பழைய வசன கவிதைகளுக்கு.. வாழ்த்து பா பாடினாய்...
நாமிருவரும் முண்டாசு கவிஞனின் குயில் பாட்டில் திழைத்து கொண்டிருந்தோம் நேரம் போவது கூட தெரியாமல்..

ஒரு புறம் நானும், மறுபுறம் நீயும் தலை வைத்து கவனம் செலுத்தினோம் தொலை காட்சி பெட்டியில்..

உந்தை உன்னை அழைக்க... படம் பாதியில் நின்ற தருணத்திலிருந்து...
என் மனம் அலைபாய தொடங்கியது...!!

நீண்ட நேர தாமதத்தால் உந்தை உன்னை ஏசி விட்டு வெளியேற...
அத்தருணம், மனக்காயத்திற்கு மருந்தாக அறுதல் சொற்களை அள்ளி வந்தேன்..

உன் மனை மாடி படியில் நான் ஏற...
எனை காண னே இறங்கி வர... சற்றே வியப்பு இருவருக்கும்..!!

நான் நடந்த தவறிற்கு மன்னிப்பு கோர...
உன் வெண்டை விரல்களால் என் தலைமயிர் கோதி என் உடல் சூட்டை இன்னும் சுடேற்றினாய்...!!
என் வாழ்வின் இரண்டாம் பெண்ணின் தீண்டல்...!!

உணர்ச்சியை உள் வாங்கி..
இருவரும் இரவு வாழ்த்தை பரிமாறி.. பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றோம் உறங்க...!!!

அடுத்த தினம்.. இன்னுமொரு கார்கில் போர்...
ஆம்!! கிரிக்கெட் போர்...!! இந்தியனும் பாகிஸ்தானும்...

சிறு திருவிளையாடல் நிகழ்த்த எண்ணினாயோ என்னவோ...
பரங்கிதலையனாம் பாகிஸ்தானின் வெற்றிக்காக பந்தயம் கட்டினாய்...
நானும் எனை மறந்து... நம்மில் உள்ள உறவையும் மறந்து.. உன்னோடு வாக்குவாதமாய் போர் நிகழ்த்தி..
முடிவுக்கு வந்தோம்...

பாரதம் வெற்றி பெரும் என்றேன் நான்...
எனக்கு எதிர் மறையை நீ...!!

நான் வென்றால் பந்தயபனம் உறுதி... ஆனால்,
அதுவே நம் உறவுக்கு அது இறுதி!! உணர்ந்த மாத்திரத்தில், உணர்வற்று போனேன்..!!

ஈசனை எண்ணி இம்மை பற்றி தோற்க்க வேண்டினேன்... அங்குமோர் அதிரிச்சி எனக்கு...
எனக்கு முன்னே அவள்.. அவாலயத்தில்..!!

இறுதியாக என் வேண்டுகோள் பலித்தது...
பாரதத்தின் தோல்வி என்னை முதன்முதலாய் ஆரவரபடுத்தியது!!!

இத்தருண நிகழ்வுகளை மனதில் வைத்து கொண்டு என்னோடு மௌனம் சாதித்தாய் ஒரு சில தினங்கள்...!!
அப்போது தான் முதன்முதலாய் உறவுகளுக்காக ஏங்கினேன்...!!!

கைஜாலங்களால் என்னோடு உரையாடி, இறந்து போன என்னுயிருக்கு உணர்வூடினாய்..!!

கடும் வாக்குவாதம்...
ஈரெட்டாம் நாளாம் இரண்டாம் மாதத்தில்....
"இனி உன்னோடு பேசாமடந்தை போல வாழ ஆசைபடுகிறேன்!!"
என்று உரைத்து விட்டு வெளியேறினேன்...

அன்றைய தினம்... மாலையில் உன் சினம் தணிக்க...
என்னருமை தமிழால் கோர குடந்தை தீ விபத்தை...
குறைவில்லாமல் கவி வரைந்து ஆங்கில இலக்கண ஏட்டில்..
இறுக வைத்து உன்னிடம் சேர்க்க சொல்லி கொடுத்துவிட்டேன் உன் தமையனிடம்..

வீட்டின் மாடியில் நின்றுகொண்டு... இயற்கையின் அழகை ரசித்துகொண்டிருக்கும் தருணம்..
சாலையை கடந்து செல்லும் மின்னலாய் உன் புன்னகை பூத்த முகம்..!!
நானும் புன்முறுவல் பூத்தேன்...!!

சிறிது நேரத்தில்..
அந்த மகிழ்ச்சியில் நீ பேதை பருவத்திலிருந்து... மங்கை பருவத்தை எய்தினாய்!!

குதூகலம் தான் எனக்கும்...
உன்னை காண விழைந்து உன்மனை வர...
உந்தை என்னை வாசலிலேயே வரி தொடர்பாக பேச.. சிந்தனையேதும் இல்லாமல் பதிலளித்து வந்தேன்...

உள்தாளிட்ட கதவை திறந்தது...
நாணி நின்றாய் நீ...!!

அந்த நாணம் என்னை நயமாக களவாடியது....!!!

இது ஒரு சிறு பகுதி தான்!! இன்னும் தொடர்வேன் வரும் நாட்களில்!! பிறகு சந்திப்போம்...!! அடுத்த வாரம்...


- கண்ணகி தாசன் -





 

No comments:

Post a Comment