Wednesday, October 31, 2012

அவையடக்கம் 

முதல் முத்தாய் என் ஆழி மனக்கடலில்.... !!!

சொற்குற்றமோ, பொருட்குற்றமோ பிழையென பிரதிபலித்தால் பொருத்தருள வேண்டுகிறேன்...

இப்படிக்கு 
கண்ணகி தாசன்

வலி!!!

கடவுள் கூட 

வலி தாங்கத்தான் வேண்டும்...

கல்லாயிருக்கும் போது...!!!

- கண்ணகி தாசன்-

நியமனம்!!!!

உன்னை நினைப்பதற்கு நியமனமேதும் தேவைப்படவில்லை ..

உன்னை மறப்பதற்க்கு மட்டும் ஏன் நியமித்தாய்.... 

நம் காதலை...!!!

- கண்ணகி தாசன் -

Thursday, October 11, 2012



நெஞ்சம் பதைத்தே போனேனே.. இப்பாவி
இயன்ற செய்கை செய்திலையோ என்றெண்ணி???


விதைத்த விதைகளெல்லாம்...
வேரூன்றி  நின்ற நாட்களிலே....

சிதைத்தே போனதே இந்த....
சீர்கெட்ட கலாச்சாரம்!!!

எம் தமிழை வதைக்கிறோம் நாம், வறியவரின் அந்நிய மொழியினால்...

என்ன செய்ய...

"தாரம் தேடும் என் நாட்டு மக்களுக்கு....
என் தமிழ் பேண நேரமில்லை போலும்..."

- கண்ணகி தாசன் -

Friday, September 14, 2012


“தோற்பதொன்றும்  புதிதல்ல....
தோல்வி மட்டும் நிலையல்ல...!!!”

- கண்ணகி தாசன்

Monday, September 10, 2012

ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம்.... 
உண்மை தான்....
உன்னை இழந்தேன்....
என்னை மறந்தேன்... 
உணர்ந்தேன் உலகம் இதுவென....!!!

- கண்ணகி தாசன் -

மனையாளின் மாதுயர் தீரா, மனிதனோ யான்..... அல்லன்!!!
கொடும் மாக்களினையொத்தன்...!!!
இக் கொடும் பாவி எரிக்க தணல் வேண்டின்... தேவையில்லை!!!
அந்த பூங்குழலாள் எச்சம் என விட்டு சென்ற இப்பொல்லாத காதல் பிரிவு செய்யும் அதை....!!

- கண்ணகி தாசன் -
ஆதியிட்ட நாள் முதலாய்...
நான் பாதி நின்ற இப்பார் தன்னில்...
நாதியின்றி போனேன் யான்...
வியாதியென அவளின் காதல் என்னை விரயம் செய்ததினால்....!!!

-கண்ணகி தாசன்-

Sunday, September 2, 2012

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??

ஆங்கிலேயனிடம் போராடி...

அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??

நாட்டுக்கு வேண்டுமானால் 65 வருடங்கள் நிறைவடைந்திருக்கலாம்...

விடியலை தேடி விழித்திருக்கும் என் நாட்டு மக்களுக்கு எப்போதோ???

- கண்ணகி தாசன் -

Saturday, August 25, 2012

நரக வாழ்க்கை!!!

நட்பின் போர்வையால்... பிரிவு-
நஞ்சு அள்ளி தெளித்தாள் தோழி....

சத்தியம் எனும் சிறையில் சிறைபட்டேன் நானே...
மறக்கவும் வழியில்லை.... நடத்தவும் துணையில்லை...  

இனி நரக வாழ்க்கை தான் போலும்...!!

- கண்ணகி தாசன் - 

Tuesday, August 14, 2012

நிலவில்லாத விண்மீன் கூட்டம்..
நீயல்லாத என் உலகம்...!!!

- கண்ணகி தாசன் -

Sunday, August 5, 2012


என்பாதி என்னில் இருக்க.. இன்றளவும் -
நின்பாதி தேடி அலைகிறேன்..
என் நினைவிழந்தபடியால்...

- கண்ணகி தாசன் -

வீழ்ச்சி......


உன்னை வீழ்த்துவது என் நோக்கமல்ல...
உன் அன்பில் வீழ்வது தான் என் நோக்கம்..

வீழ்வதற்கு நான் தயார்.. 
எனை வீழ்த்துவதற்கு நீ தயாரா???

- கண்ணகி தாசன் -

மருகிய நாட்களெல்லாம் 


மறுப்பிறவி தானெடுக்க,

மட்க தான் செய்கிறது 

என் அன்றைய தின சிறு மகிழ்வை....!!!

- கண்ணகி தாசன் -

அறிமுகம்!!!

உருவம் கொடுத்தாள் அன்னை..
உயிர் கொடுத்தார் தந்தை..
தோள் கொடுத்தான் தோழன்...
உலகம் இதுவென உணர்த்தினான் தருமி...
என்னில் செந்தணல் பூக்கத்தான் செய்கிறான் பகைவன்...

எள்ளளவும் அறிவில்லாத என்னுள்...
ஏர்பூட்டி ஏற்றம் கண்டார் என் ஆசான்...

தன்னம்பிக்கை இதுவென 
காட்ட தான் என்னை சிலந்தி வாய் பசையென தொடர்வாய் தோல்விகள்...

இத்தனையிலும் இயம்பாத ஒன்றை, 
மிக அழகாய் அறிமுகபடுத்தி போனது உன் ஓர விழி பார்வை...
"காதல், பிரிவு, மரணம்,"

- கண்ணகி தாசன் -

Monday, July 2, 2012

தமிழ் தாய்

அந்நியனிடம் போராடி...
சுதந்திரம் பெற்றோம்....!!!!

ஒன்றுப்படோம்...
உதைபட்டோம்...
உயர்ந்து நின்றோம் வீழ்ந்தாலும்...!!!

ஆனால் இன்றோ...
நம்மக்குள்ளே வேற்றுமை விரோதம்...!!!

சிந்தை தெளியவில்லையே இன்றளவும்!!!
இன்று நீ முட்டி மோதிக்கொள்வது ஒரு தாய் வயிற்று பிள்ளைகளோடு!!!

என்றாவது நினைத்திருக்கிறாயா நம் தாயை பற்றி...!!!

தமிழ்தாயோ அவசர சிகிச்சைப்பிரிவில்....
ஏதோ சில தமிழறிஞ்ர்கள் சிகிச்சையளிக்க.....
தாயோ ஏதோ...
வாழ்கிறாள் இன்றளவும் குறை உயிரோடு...!!!

பெற்ற தாயை பேணிக்காப்பது...
நம் கடமையன்றோ???

பகுடி பேச்சுக்களும் வீண் சண்டைகளும் இனியும் வேண்டாமே...!!!

தமிழை வளர்ப்போம், தரணி அளப்போம், வாருங்கள்...!!

- கண்ணகி தாசன் -

Friday, June 1, 2012

இயற்கை தாயே...


இயற்கை தாயே...
உனக்கேனிந்த கோரகுணம்....!!!

விதியின் வழிகாட்டலினால்..
வம்பிழைத்தாயோ தெரியவில்லை எனக்கு...!!!

வரம் பெற்றெடுத்த மகவைகளை 
மண்ணோடு அறைந்த நேரம்....
எம்நெஞ்சு பதைத்தது போல்..
உன் தாய்மை நேசம் பதைக்கவில்லையோ...???
சூறையாடியது உன் மகவைகள்ல்லவா???

உன்னை பெண் என்று தானே நினைத்தோம்...
நீ பேயாக மாறிய காரணமென்னவோ???

தீங்கிழைத்தவர்களை தீக்கரைக்கு இறையாக்கிருக்கலாமே.....
ஏன் பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்தாய்...!!! குடந்தையில்....!!

சுனாமியில், ஆழி பேரலை கொண்டு..
சுண்டி விடும் நேரத்தில் அழித்து கொன்றாய்....!!!

மனிதர்களோடு பழகிய நீ...
ஒருவேளை மாக்களுக்கு துணை போனாயோ...???

மடிந்து போவது தான்..
மனித இயல்பு... நான் மறுக்கவில்லை...!!!

ஆனால் அதை ஏன் நீ செய்தாய்...????

இயற்கை மரணம் வரட்டும், யாரும் அஞ்சப்போவதில்லை.... ஆனால்,
இயற்கையால் வரக்கூடாதல்லவா!!!
ஒரு வேளை,
குடந்தை தீயணைக்க, நீர் சேர்தாயோ தெரியவில்லை எனக்கு.... ஆனால்,
தாமதமாக வந்து விட்டாய், தரி கேட்டு சென்று விட்டாய்...
வேண்டாமே இனி மேலும் இந்த கோரம்..!!!

உண்மை காதல்!!!!

கனவுகள் ஏதுமில்லை கைவசம்....
நினைவுகள் நெஞ்சை கிள்ளி எரியும் அனுதினம்....

நீங்கா துயராய் மாறிபோனாயே என்வசம்.....

காதலர்கள் இறந்தாலும்....
உண்மை காதல் மட்டும் இறப்பதில்லையே என்றென்றும்....!!!