Friday, June 1, 2012

இயற்கை தாயே...


இயற்கை தாயே...
உனக்கேனிந்த கோரகுணம்....!!!

விதியின் வழிகாட்டலினால்..
வம்பிழைத்தாயோ தெரியவில்லை எனக்கு...!!!

வரம் பெற்றெடுத்த மகவைகளை 
மண்ணோடு அறைந்த நேரம்....
எம்நெஞ்சு பதைத்தது போல்..
உன் தாய்மை நேசம் பதைக்கவில்லையோ...???
சூறையாடியது உன் மகவைகள்ல்லவா???

உன்னை பெண் என்று தானே நினைத்தோம்...
நீ பேயாக மாறிய காரணமென்னவோ???

தீங்கிழைத்தவர்களை தீக்கரைக்கு இறையாக்கிருக்கலாமே.....
ஏன் பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்தாய்...!!! குடந்தையில்....!!

சுனாமியில், ஆழி பேரலை கொண்டு..
சுண்டி விடும் நேரத்தில் அழித்து கொன்றாய்....!!!

மனிதர்களோடு பழகிய நீ...
ஒருவேளை மாக்களுக்கு துணை போனாயோ...???

மடிந்து போவது தான்..
மனித இயல்பு... நான் மறுக்கவில்லை...!!!

ஆனால் அதை ஏன் நீ செய்தாய்...????

இயற்கை மரணம் வரட்டும், யாரும் அஞ்சப்போவதில்லை.... ஆனால்,
இயற்கையால் வரக்கூடாதல்லவா!!!
ஒரு வேளை,
குடந்தை தீயணைக்க, நீர் சேர்தாயோ தெரியவில்லை எனக்கு.... ஆனால்,
தாமதமாக வந்து விட்டாய், தரி கேட்டு சென்று விட்டாய்...
வேண்டாமே இனி மேலும் இந்த கோரம்..!!!

உண்மை காதல்!!!!

கனவுகள் ஏதுமில்லை கைவசம்....
நினைவுகள் நெஞ்சை கிள்ளி எரியும் அனுதினம்....

நீங்கா துயராய் மாறிபோனாயே என்வசம்.....

காதலர்கள் இறந்தாலும்....
உண்மை காதல் மட்டும் இறப்பதில்லையே என்றென்றும்....!!!